search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டு குடிநீர் திட்டம்"

    • உடைப்பால் குடிநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
    • குடிநீர் சாலை முழுவதும் செல்வதால் இருசக்கரம், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை சிரமப்பட்டு ஓட்டு சென்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் மக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்திசெய்ய ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தருமபுரியிலிருந்து திருவண்ணாமலை வரை ரூபாய் 410 கோடி மதிப்பீட்டில் இருவழி சாலை, நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு விரிவாக்க பணி செய்யபட்டு வருகிறது.

    இந்நிலையில் ஒடசல்பட்டி பகுதியில் நான்கு வழிச்சாலை ஒப்பந்த முறையில் பணிகள் நடந்து வருகிறது. நேற்று சாலை விரிவாக்க பணிகளின் போது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த உடைப்பால் குடிநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. குடிநீர் சாலை முழுவதும் செல்வதால் இருசக்கரம், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை சிரமப்பட்டு ஓட்டு சென்றனர்.

    குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

    ×